நாம் வாழும் இவ்விறுதி நாட்களில் நம்மிடம் தம் மகனின் வாயிலாகவே பேசியுள்ளார். இவரை எல்லாவற்றிற்கும் உரிமையாளராக்கினார். இவர் வழியாகவே உலகங்களையெல்லாம் படைத்தார்.
கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய உள்ளியல்பின் சாயலாகவும் விளங்கும் இவர் தம்முடைய வல்லமை மிக்க வார்த்தையால் எல்லாவற்றையும் தாங்கி வருகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்திய பின்னர் உன்னதங்களில் மகத்துவமிக்கவரின் வலப்புறத்தில் அமர்ந்துள்ளார்.
ஏனெனில் 'நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்' என்றும், 'நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன். அவர் எனக்கு மகனாயிருப்பார்' என்றும் எப்போதாவது வானதூதருள் யாரிடமாவது சொன்னதுண்டா?
இறைநெறியை விரும்பினீர்; தீ நெறியை அருவருத்தீர்; ஆதலால் இறைவா, உம் கடவுள், உம் துணைவர்களினும் மேலாக உம்மை மதித்து அக்களிப்புத் தைலத்தால் உம்மை அபிஷுகம் செய்தார்."